இவர் தான் உண்மையான சூப்பர்ஸ்டார்! அள்ளித் தரும் ஷாரூக் கான்!

04 April 2020 சினிமா
shahrukhkhanlatest.jpg

இந்தியாவே இக்கட்டான சூழ்நிலையில் உள்ள பொழுது, நடிகர் ஷாரூக் கான் தற்பொழுது தன்னுடைய பங்காக பல உதவிகளை அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, பிஎம்கேர்ஸ் என்ற பெயரில் நிவாரண உதவியினை வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏப்ரல் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவின் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையானது பாதிக்கப்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி, பலரின் உணவு முதலான அனைத்து அத்தியாவசியத் தேவைகளும் கடுமையாகத் தட்டுப்பாட்டினை எதிர்நோக்கி இருக்கின்றன.

இந்நிலையில், இந்தியாவின் பல மாநிலங்களில் இந்த கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. நோயாளிகளுக்கு உதவி செய்ய பலத் தொண்டு நிறுவனங்களும் முன் வந்துள்ளன.

பாலிவுட் நடிகர்கள் பலரும், பிரதமர் மோடியின் நிவாரண நிதி கணக்கிற்குப் பணம் செலுத்தி வருகின்றனர். நடிகர் அக்சய் குமார் தன் பங்காக 25 கோடியினை அறிவித்துள்ளார். சல்மான் கான் 25,000 சினிமாத் துறை ஊழியர்களுக்கு நிதியுதவி செய்தார். இதனிடையே, உலகளவில் அதிக ரசிகர்களைக் கொண்டவரும், பாலிவுட் பாஷா என்பவருமான ஷாரூக் கான் தாராளமாக உதவிகளை வாரி வழங்கியுள்ளார்.

மருத்துவ உபகரணங்கள் முதல் உணவுப் பொருட்கள் வரை, அனைத்து விதமான உதவிகளையும் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, தனக்கும் தன்னுடைய மனைவிக்கும் சொந்தமான நான்கு மாடிக் கட்டிடத்தினை, தற்பொழுது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பயன்படுத்த, அனுமதி அளித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட வேண்டிய நோயாளிகள் பலரும், அந்த கட்டிடத்தில் தனிமைப்படுத்த உரிமை அளித்துள்ளார். இதற்கு இந்தியா முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. #SRKOfficeForQuarantine என்ற ஹேஸ்டேக் மூலம், அவருடைய ரசிகர்கள் அவரை புகழ்ந்து கொண்டாடி வருகின்றனர்.

HOT NEWS