மஹாராஷ்டிராவில் திடீர் திருப்பம்! மோடியை சந்திக்கும் சரத் பவார்!

20 November 2019 அரசியல்
sharadpawar.jpg

இன்று பாரதப் பிரதமர் மோடியினை, மஹாராஷ்டிரா தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் சந்திக்க உள்ளார்.

இன்று மதியம் 12 மணிக்கு இந்த சந்திப்பானது, டெல்லியில் நடைபெற உள்ளது. இதற்காக, டெல்லி செல்கின்றார் சரத் பவார். தற்பொழுது இது மஹாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது.

புயல் மற்றும் திடீர் மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக, சுமார் 70 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் நாசமாகிவிட்டன. விவசாயிகள் தற்பொழுது கடும் பிரச்சனையினை எதிர் கொண்டு இருக்கின்றனர். இது கிட்டத்தட்ட 5000 கோடி ரூபாய் அளவிற்கு, நஷ்டத்தினை தற்பொழுது ஏற்படுத்தி உள்ளது.

இவைகளைப் பற்றிப் பேசவை சரத் பவார் செல்கின்றார் என, தேசியவாத காங்கிரஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சிவசேனா கட்சியின் முக்கிய தலைவரான சஞ்சய் ராவத், பிரதமரை சந்திப்பது சாதாரண விஷயம். இதில் என்ன அரசியல் இருக்கின்றது என்று எனக்குப் புரியவில்லை. அவர், இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பிரதமர். தற்பொழுது, மஹாராஷ்டிராவில் உள்ள விவசாயிகள் கடும் பிரச்சனையில் உள்ளனர் எனக் கூறியுள்ளார்.

HOT NEWS