விரைவில் சிவசேனா ஆட்சி அமையும்! சஜ்ஜய் ராவத் அதிரடி பேச்சு!

19 November 2019 அரசியல்
shivsena1.jpg

மஹாராஷ்டிராவினை தான் தற்பொழுது, ஒட்டு மொத்த இந்தியாவும் பார்த்துக் கொண்டு இருக்கின்றது. அந்த அளவிற்கு அந்த மாநிலத்தில் தற்பொழுது, யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற குழப்பம் நிலவி வருகின்றது.

பாஜக அதிக இடங்களில் வென்ற போதிலும், பெரும்பான்மை இல்லாத காரணத்தினால், தங்களால் ஆட்சியமைக்க இயலாது எனக் கூறிவிட்டது. இதற்கு முக்கியக் காரணமாக இருந்தது, அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா. அவர்கள் தங்களுக்கு முதல்வர் பதவி தந்தால் மட்டுமே, பாஜக ஆட்சியமைக்க ஒத்துழைப்பு அளிப்போம் எனக் கூறிவிட்டனர்.

இந்நிலையில், சிவசேனா ஆட்சியமைப்பதற்க்கு, தேசியாவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவினை நாடியது. ஆனால், அதற்குள் ஆளுநர் அழைத்துவிட்டதால், ஆட்சியமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது.

இந்நிலையில், யாரும் ஆட்சியமைக்க முன்வராததால் மஹாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமலில் உள்ளது. அடுத்த ஆறு மாத்திற்குள் ஆட்சி அமைக்காவிட்டால், அங்கு அடுத்ததாக ஒரு தேர்தல் நடத்தப்படும் என்பது தான் தேர்தல் ஆணையத்தின் விதி. இதனால், அடுத்த ஒருத் தேர்தலை நாங்கள் விரும்பவில்லை என, பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் ஏற்கனவேத் தெரிவித்து விட்டனர். இந்நிலையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவ சேனா மூன்றும் கூட்டாக இணைந்து ஆட்சி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே, போகின்ற போக்கில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் திரு. சரத் பவார் தான் என்னுடைய, அரசியல் குரு நாதர் என பாரதப் பிரதமர் மோடி குறிப்பிட்டுப் பேசினார். அவ்வளவு தான், மீண்டும் சிக்கல் வெடித்துவிட்டது. இதற்குப் பதிலளிக்கும் விதத்தில் பேசியுள்ள சிவசேனா கட்சியின் எம்பி சஞ்சய் ராவத், இது ஒரு சாதாரண விஷயம். மீடியா தான் இதனைப் பெரிதுபடுத்துகின்றது. கண்டிப்பாக டிசம்பர் மாதத் தொடக்கத்தில் மஹாராஷ்டிராவில், சிவசேனா கட்சியின் ஆட்சி அமையும் என்பதில் சந்தேகம் வேண்டாம் என்றுக் கூறியுள்ளார்.

HOT NEWS