பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது! உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தலைவர்கள் பேச்சு!

13 November 2019 அரசியல்
shivsena1.jpg

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் சிவ சேனாவிற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளும், காலம் தாழ்த்தி வருகின்றன.

மஹாராஷ்டிரா தேர்தலில், பாஜக மற்றும் சிவ சேனா கட்சியினர் கூட்டாக இணைந்துப் போட்டியிட்டனர். இதில், பாஜக 105 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான சிவ சேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இதில் பாஜக, முதல்வர் பதவியினை விட்டுக் கொடுக்காமல் இருந்தது. இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவினை சிவசேனா நாடியது. இருப்பினும், பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது.

மேலும், பாஜக தங்களிடம் பெரும்பான்மை இல்லை என ஆளுநரிடம் கூறிவிட்டது. இதனால், மஹாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங், சிவ சேனா கட்சியினை ஆட்சி அமைக்க அழைத்தார். இதனையடுத்து, சிவசேனா கட்சியினர் ஆட்சியமைப்பது குறித்து, ஆளுநரிடம் பேசும் பொழுது 48 மணி நேரம் அவகாசம் கேட்டனர். ஆனால், அவகாசம் தர மறுத்துவிட்டார்.

இந்நிலையில், நேற்று சிவ சேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரே, காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியா காந்தியிடம் போன் மூலம் தொடர்பு கொண்டார். இதனை காங்கிரஸ் கட்சியின் அஹமத் பட்டேல் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

சிவசேனா ஆட்சியமைக்க, காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளது. மேலும், சிவ சேனா கட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார்.

இதனிடையே, தற்பொழுது அனைவரும் அமர்ந்து பேசுவதற்கு காலம் தேவைப்படுகின்றது. மேலும், கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தால் எப்படி பிரச்சனை இல்லாமல் சுமூகமாக ஆட்சியை நடத்துவது குறித்தும் பேச வேண்டி உள்ளது எனவும், சிவசேனா தரப்பினர் கூறி வருகின்றனர்.

HOT NEWS