கதவுகள் இன்னும் திறந்தே உள்ளன! பாஜகவை மறைமுகமாக குறிப்பிடும் சிவசேனா!

13 November 2019 அரசியல்
shivsena.jpg

இன்னும் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே உள்ளதாக, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே கூறியுள்ளார்.

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தினமும் புதிய புதிய கூட்டணி அழைப்புகளும், சலுகைகளும் வந்து கொண்டே இருக்கின்றன. குடியரசுத் தலைவர் எங்களுக்கு ஆறு மாத கால அவகாசம் அளித்துள்ளார். நாங்கள் பாஜகவுடன் கூட்டணியினை முறித்துக் கொள்ளவில்லை. அவர்கள் தான், கூட்டணியினை முறித்துக் கொண்டு உள்ளனர்.

கூட்டணிக்கான கதவுகள் எப்பொழுதும், திறந்தே இருக்கும். ஆட்சி அமைப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும். அப்பொழுது பாஜகவுடன் கூட்டணி முறிந்துவிட்டதா என, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த தாக்ரே, ஏன் இவ்வளவு அவசரப்படுகின்றீர்கள். அரசியலில் எதுவும் சாத்தியம் எனக் கூறினார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன், பாஜக 200-220 இடங்களில் மட்டுமே வெல்வதற்கு வாய்ப்புகள் இருந்தது. அப்பொழுது, நாங்கள் அவர்களுக்கு துணையாக இருந்தோம். ஆனால், அவர்கள் தான் தற்பொழுது கூட்டணியினை விட்டு சென்றுள்ளனர் எனவும் கூறினார்.

HOT NEWS