ஓவியா, லாஸ்லியா வரிசையில் இடம் பிடிப்பாரா சிவானி நாராயணன்?

06 October 2020 சினிமா
shivaninarayanan.jpg

பிக்பாஸ் சீசன் 4 கோலாகலமாகத் துவங்கி விட்டது. உலக நாயகன் கமல்ஹாசன் தான், இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகின்றார். பிரம்மாண்டமான இந்த வீட்டில், பல மாற்றங்கள் செய்யப்பட்டு புதுப் பொலிவுடன் இந்த ஷோ நடைபெற்று வருகின்றது.

இந்த நிகழ்ச்சியில் 8 ஆண்களும், 8 பெண்களும் கலந்து கொண்டு உள்ளனர். இதில், சிவானி நாரயணன் என்ற சின்னத்திரை நடிகையும் கலந்து கொண்டு உள்ளார். தற்பொழுது இரண்டாவது நாளுக்கான நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகி வருகின்ற நிலையில், அதற்குள்ளும் பிக்பாஸ் வீட்டிற்குள் பஞ்சாயத்து ஆரம்பமாகி விட்டது. அந்த வீட்டிற்குள் இருக்கும் பலரும், தங்களுடைய எதிர்ப்பினை நடிகை சிவானிக்கு காட்ட ஆரம்பித்து விட்டனர்.

அதில் சிவானியின் கையில் ஸ்டாம்ப் குத்தி, தங்களுடைய எதிர்ப்பினைக் காட்டி வருகின்றனர். இதற்கு சிவானி, தற்பொழுது கவலையுடன் காணப்படுகின்றார். இது வீட்டிற்குள் என்றால், சமூக வலைதளங்களில் சிவானிக்கு உள்ள ஆதரவு என்பது வேறு லெவலில் உள்ளது. அவருக்கு ஏற்கனவே, பல லட்சம் பேர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரசிகர்களாக உள்ளனர். அவர் இவ்வாறு ஓரம் கட்டப்படுவதை எதிர்த்து, பலரும் தங்களுடைய எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இது முதல் வாரம் என்பதால், எவிக்சன் இருக்காது. எனவே, சிவானிக்கு தங்கள் ஆதரவு எவ்வளவு உள்ளது என்பதைக் காட்ட, வாக்களிக்க முடியாது. ஆனால், அடுத்த வாரம் நடைபெறுகின்ற எவிக்சன் நிகழ்ச்சியில், சிவானியின் பெயர் வந்தால், தங்களுடைய ஆதரவினைக் காட்டுவதற்கு தற்பொழுதே தயாராகி விட்டனர். பிக்பாஸ் பர்ஸ்ட் சீசனில் ஓவியா இவ்வாறு தான் பிரபலமானார். ஆதே போல், சென்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா இவ்வாறு தான் பிரபலமடைந்தார்.

அதே போல், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், சிவானி பிரபலமடைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகின்றது. தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் எவ்வளவு கிளாமராக புகைப்படங்களை வெளியிட்டு வந்தாரோ, அதே போல தான் பிக்பாஸ் வீட்டிலும், படுகிளாமராக உடை அணிகின்றார் சிவானி.

HOT NEWS