பிலிப்பைன்ஸில் ஊரடங்கை மீறினால் சுட்டுத் தள்ள உத்தரவு!

04 April 2020 அரசியல்
armytroop.jpg

ஊரடங்கினை மீறி, வெளியில் சுற்றினால் சுட்டுத் தள்ளுங்கள் என, பிலிப்பைன்ஸ் அதிபர் அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும், தற்பொழுது கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், பல நாடுகளும் ஊரடங்கு உத்தரவினைப் பிறப்பித்து உள்ளன. இதனால், உலகில் உள்ள பொதுமக்களின் நிலையானது, கேள்விக் குறியாகி உள்ளது. இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை என்பதால், தனிமைப்படுத்துதல் மற்றும் சோசியல் டிஸ்டென்சிங் என்ற தீர்வினையே அனைவரும் நாடி உள்ளனர்.

இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இந்தக் காலக் கட்டத்தில் அந்நாட்டின் மணிலா நகரினைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு, தேவையான பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவில்லை என்றப் புகார் எழுந்துள்ளது. அதனையொட்டி, பொதுமக்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்த ஆரம்பித்தனர்.

இதனை சரிகட்டும் விதத்தில், அந்நாட்டு அதிபர் டுட்டுடே வீடியோவில் தோன்றி பேசியுள்ளார். அதில், ஊரடங்கினை மீறி, போலீசாருக்கும், இராணுவத்தினருக்கும் தொல்லை தருபவர்களுக்கும், அவர்களைத் தாக்குபவர்களையும் கண்டால், கவலைப்படாமல் சுட்டுத் தள்ளுங்கள் என அதிரடியாக அறிவித்து விட்டார். இதனால், அந்நாட்டு மக்கள் கொதிப்படைந்து உள்ளனர்.

இந்த அறிவிப்பின் காரணமாக, பிலிப்பைன்ஸ் நாட்டின் வீதிகளில், பொதுமக்கள் நடமாட்டம் முற்றிலுமாகக் குறைந்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் இந்த வைரஸால் 2,500 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில், 96 பேர் மரணமடைந்து உள்ளனர்.

HOT NEWS