நடிகை ஸ்ருதி ஹாசனை அனைவருக்கும் தெரியும். கமல்ஹாசனின் மூத்த மகள் மட்டுமின்றி, இந்தியாவே அறிந்த பிரபல நடிகை. கோலிவுட், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் நடித்தவர்.
அவருக்கு ஏற்பட்டக் காதல் தோல்வியினை அடுத்து, மதுப் பழக்கத்திற்கு அடிமையானதாகவும், நடிகை ஸ்ருதி ஹாசன் டிவி சேனலில் நடத்திய நிகழ்ச்சியில் பேசி, பரபரப்பினை ஏற்படுத்தினார். இதனிடையே, அவர் குண்டாக இருக்கின்றார் எனப் பலரும் தங்களுடையக் கருத்துக்களைப் பதிவு செய்ய ஆரம்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அவர் தன்னுடைய பிளஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்ட புதிய புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். அதனுடன் தன்னுடைய கருத்தினையும் பதிவு செய்துள்ளார். அதில், நான் அடுத்தவர் கூறுவதை வைத்து நடந்து கொள்வதில்லை. என்னைப் பற்றி மற்றவர்கள் கூறும் கருத்துக்களை வைத்து, நான் வாழவில்லை. அதேபோல் நான் குண்டாக இருக்கின்றேன், ஒல்லியாக இருக்கின்றேன் என்பது போன்றக் கருத்துக்கள் தவிர்க்கப்பட வேண்டியவை.
தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ள குறித்தும் அவர் பதிவிட்டுள்ளார். அதில், நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதை ஒப்புக் கொள்கின்றேன். அதனை மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. இத்தகைய வாழ்க்கையினைத் தான், நான் தேர்வு செய்துள்ளேன் எனக் கூறியுள்ளார்.