சித்த வைத்தியர் சிவராஜ் இயற்கை எய்தினார்! பேரப் பசங்களா மறந்துடாதீங்கடா!

10 February 2021 சினிமா
sidhasivaraj.jpg

சித்த வைத்தியர் சிவராஜ் இன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவருடைய உடலுக்குப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கடந்த 7 தலைமுறைகளாக 206 ஆண்டுகளுக்கும் மேலாக, சித்த வைத்தியத்தில் சிவராஜின் குடும்பமானது வெற்றிகரமாக ஈடுபட்டு வருகின்றது. அந்த வரிசையில் வந்தவர் சிவராஜ். இவர் ஆண்மைக் குறைபாடு, நரம்புத் தளர்ச்சி, இல்லற மற்றும் தாம்பத்தியப் பிரச்சனைகளுக்கு தீர்வு கூறி வந்தார். இவருடையப் பேச்சானது, இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். பேரப் பசங்களா இந்தத் தப்ப மட்டும் பண்ணாதீங்கடா என்ற வசமானது தமிழ் மக்களிடையேப் புகழ் பெற்றது.

பல விருதுகளை சித்த மருத்துவத்தில் பெற்ற இவர், பல டிவித் தொலைக்காட்சிகளிலும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைக் கூறி வந்தார். அவர் கடந்த சில மாதங்களாக, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில், அவருடைய உயிர் இன்று பிரிந்தது. பொதுமக்களின் அஞ்சலிக்காக அவருடைய சொந்த ஊரான சேலத்திற்கு அருகிலுள்ள சிவதாபுரத்தில் அமைந்துள்ள, அகஸ்தியர் மாளிகையில் வைக்கப்பட உள்ளது. இன்று மாலையில் அவருடைய உடலானது நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

HOT NEWS