pic courtesy:twitter.com
கடந்த ஆண்டிற்கான சைமா விருதுகள் தற்பொழுது வழங்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்கி, இரண்டு நாட்கள் நடைபெற்ற சைமா விருதுகள் வழங்கும் விழாவில், பல நட்சத்திரங்களும் கலந்து கொண்டன. இந்நிகழ்ச்சி கத்தார் நாட்டில் நடைபெற்றது.
இதில் சிறந்த தமிழ் படமாக பரியேறும் பெருமாள், தேர்வு செய்யப்பட்டது. அதே போல் நடுவர்களின் சிறப்பு விருது, இப்படத்தில் நடித்த நடிகர் கதிருக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகராக நடிகர் தனுஷ் வட சென்னை படத்திற்காக, தேர்வு செய்யப்பட்டார். சிறந்த நடிகைக்கான விருதினை, நடிகை திரிஷா 96 படத்திற்காக பெற்றார். விமர்சகர்களின் சிறந்த நடிகருக்கான விருதினை, நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய அடங்கமறு படத்திற்காக பெற்றார்.
அதே போல், விமர்சகர்களின் சிறந்த நடிகைக்கான விருதினை, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கனா படதிற்காக பெற்றார். நடிகை வரலட்சுமி சரத்குமார் சர்கார் படத்திற்காக, சிறந்த வில்லி நடிகை என்ற விருதினைப் பெற்றார். சிறந்த பாடாலசிரியர் விருதினை இயக்குநர் விக்னேஷ் சிவன் தானா சேர்ந்த கூட்டத்தில் வரும் பாடலுக்காகப் பெற்றார்.
சிறந்த காமெடியனுக்கான விருதினை, கோலமாவு கோகிலா படத்திற்காக நடிகர் யோகி பாபு பெற்றார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினை, இசையமைப்பாளர் அனிருத், கோலமாவு கோகிலா படத்திற்காக பெற்றார். சிறந்த இயக்குநருக்கான விருதினை, கோலமாவு கோகிலா படத்தினை இயக்கிய நெல்சன் பெற்றார். சுரேஷ் குமார் மற்றும் நடிகை சுரேஷ் குமார் ஆகியோர் வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெற்றனர்.
பெரிய நடிகர்கள் நடித்தப் படங்கள் வெளியான நிலையிலும், பரியேறும் பெருமாள் மற்றும் கோலமாவு கோகிலா திரைப்படம் அதிக விருதினை வென்றது. பல நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகளும், இவ்விருது வழங்கும் விழாவில் நடைபெற்றன.