எஸ் ஐ வில்சன் கொலை வழக்கு! துப்பாக்கி கைப்பற்றப்பட்டது!

23 January 2020 அரசியல்
siwilsoncase.jpg

எஸ் ஐ வில்சன் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியானது, எர்ணாகுளத்தில் போலீசார் மூலம் கைப்பற்றப்பட்டுள்ளது.

கன்னியாக்குமரி களியக்காவிளைப் பகுதியில், சோதனைச் சாவடி அருகே பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு எஸ்ஐ வில்சனை இருசக்கர வாகனத்தில் வந்த, தவுபிக் மற்றும் ஷமீம் என்பவர்கள், துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்தினர். இதனால் இரத்த வெள்ளத்தில் மிதந்த வில்சன் மரணமடைந்தார்.

அவருடைய குடும்பத்திற்கு, ஒரு கோடி ரூபாயினை ஆறுதல் நிவாரணப் பணமாக தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து, குற்றவாளிகளை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் பத்து நாட்கள் போலீஸ் விசாரணைக்கு அனுமதி அளித்தது நீதிமன்றம். இதனையடுத்து, இரண்டு பேரினையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் விசாரிக்கும் பொழுது, பலத் திடுக்கிடும் தகவல்கள் இரண்டு குற்றவாளிகளும் அளித்தனர்.

அவர்கள் கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதத்தினை, போலீசாரால் கைப்பற்ற இயலவில்லை. ஆனால், அவர்கள் தங்களுடையத் தகவல் தொடர்பிற்காக பயன்படுத்திய சிம் கார்டுகளை, க்யூ பிரிவு போலீசாரின் உதவியுடன் கண்டறிந்தனர். இந்த சிம்களை போலீயான விவரங்களை அளித்து விற்றதற்காக, ஒன்பது பேரினையும் போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து, இன்று காலையில் கேரளாவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட தவுபிக் மற்றும் ஷமீம் பயன்படுத்திய ஆயுதங்களைக் கைப்பற்ற போலீசார் முயற்சி செய்தனர். அப்பொழுது, தாங்கள் பயன்படுத்திய ஆயுதங்களை, எர்ணாகுளத்தில் உள்ள கழிவுநீர் ஓடையில் வீசிவிட்டதாக, இருவரும் வாக்குமூலம் அளித்தனர். அந்தக் கழிவு நீர் ஓடையில் இருந்து, துப்பாக்கி மற்றும் தோட்டாக்களைப் போலீசார் தற்பொழுது கைப்பற்றியுள்ளனர்.

HOT NEWS