பல வருடங்களாக, சிம்பு சரியாக நடிப்பது இல்லை. பல தயாரிப்பாளர்களுக்கு நஷ்டங்கள், கொடுத்த அட்வான்ஸ் பணத்தினைத் திருப்பித் தருவது இல்லை, சூட்டிங்கிற்கு சரியான நேரத்தில் வருவது இல்லை என அடுக்கடுக்காகப் புகார்கள் வந்த வண்ணம் இருந்ததால், சிம்பு ரசிகர்கள் கவலையடைந்து இருந்தனர். இருப்பினும், இதைப் பற்றியெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாத சிம்பு, ஜாலியாக வெளிநாடு பயணம் கிளம்பி சென்றுவிட்டார்.
இதனை அடுத்து, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு திரைப்படம் எடுக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால், வழக்கம் போல அட்வான்ஸ் பணத்தினை வாங்கிக் கொண்டு வெளிநாடு சென்றுவிட்டார் சிம்பு. இதனால், டென்ஷன் ஆன காமாட்சி படத்தினைக் கை விடுவதாக அறிவித்தார்.
இதற்கடுத்து, மகாமாநாடு படத்தினை சிம்புவே இயக்கி தயாரிக்க உள்ளதாக, தகவல் பரவியது. ஆனால், மீண்டும் மாநாடு படத்தில் சிம்பு நடிக்க சம்மதித்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கிடையே, 48 நாட்கள் விரதம் இருந்து, கேரளாவில் உள்ள சபரி மலை ஐயப்பனை தரிசிக்க மாலை அணிந்துள்ளார் நடிகர் சிம்பு.
கடந்த 27 ஆண்டுகளுக்கு முன், சபரி மலைக்கு மாலை அணிந்து, சென்ற பின்னர் தான், சினிமாத் துறைக்குள் வந்தார். தற்பொழுது, மீண்டும் அந்த சென்டிமென்டில் மாலை அணிந்துள்ளார்.
இதனை தற்பொழுது, சிம்புவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், சிம்பு மீண்டும் வர வேண்டும், மீண்டு வர வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.