சிம்பு திருமணம்! முக்கிய அறிவிப்பு வெளியிட்ட டிஆர் குடும்பத்தார்!

08 June 2020 சினிமா
simbu-hansika.jpg

நடிகர் சிம்புவிற்கு திருமணம் என இணையத்தில் செய்திகள் வெளியான நிலையில், அதற்கு மறுப்புத் தெரிவித்து டி ராஜேந்தர் குடும்பத்தினர் அறிக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.

நேற்று இணையத்தில் ஒரு செய்தி பரபரப்பானது. அதில், நடிகர் சிம்புவிற்கும், லண்டன் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளுக்கும் நிச்சயதார்த்தம் ஆகியுள்ளது என்றுக் கூறப்பட்டது. இது, வைரலாக ஆரம்பித்தது. இந்த செய்தியால், சிம்புவின் ரசிகர்கள் குஷியாகிவிட்டனர்.

இந்நிலையில், இந்த செய்திக்கு மறுப்புத் தெரிவித்து டி ராஜேந்தர் குடும்பத்தினர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டனர். அவர்கள் அறிக்கையில், எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கையிலும், இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மை தன்மை அற்றவை.

எங்கள் மகன் சிம்புவின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்ணை பார்த்துக் கொண்டு இருக்கின்றோம். பெண் அமைந்ததும், சிலம்பரசன் திருமணம் பற்றிய நற்செய்தியினை முதலில் பத்திரிக்கை வாயிலாக உங்கள் அனைவருக்கும் சந்தோஷத்துடன் அதிகாரப்பூர்வமாக நாங்களே அறிவிப்போம். அதுவரை வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம். என டி ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தர் கையொப்பத்துடன் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

HOT NEWS