நீண்ட நாட்களுக்குப் பிறகு, நடிகர் சிம்பு பற்றிய சுவரஸ்யமானத் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.
நடிகர் சிம்பு, தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியேறினார். அதனைத் தொடர்ந்து, பல மாதங்களாக அவர் பெரிய அளவில் சினிமாவில் நடிக்கவே இல்லை. தொடர்ந்து அதிகரித்து வந்த உடல் எடையினைக் குறைக்கும் பொருட்டு, அவர் பல ஆயுர்வேத மூலிகை சிகிச்சைகளை எடுத்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, மாநாடு படத்தில் அவர் இணைந்தார்.
இந்தப் படத்தினை வெங்கட் பிரபு இயக்கி வருகின்றார். அதனை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகின்றார். இந்தப் படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், திடீரென்று பரவிய கொரோனாவால் ஊரடங்கு உத்தரவானது அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில், இன்று தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களை திறப்பதாக நடிகர் சிம்பு அறிவித்து இருந்தார்.
அதன்படியே, தற்பொழுது புதிய சமூக வலைதளப் பக்கங்களை அவர் ஆரம்பித்து உள்ளார். அதில் வீடியோ ஒன்றினையும் வெளியிட்டு உள்ளார். அது அவருடைய புதிய படம் என்று கூறப்படுகின்றது. அந்த வீடியோவில் ஆட்மேன் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த வீடியோ முழுக்க, அவர் உடற்பயிற்சி செய்யும் முறைகள் இணைக்கப்பட்டு உள்ளன. இதனை தற்பொழுது சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.