டிக்டாக் ஆப்பினைப் பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கையானது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதில் தற்பொழுது பலப் பிரபலங்கள் இணைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத், தற்பொழுது டிக்டாக்கில் இணைந்துள்ளார். இதில் தன்னுடைய வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார். மேலும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவரான, சிம்ரனும் இதில் இணைந்துள்ளார்.
இது தற்பொழுது பேசு பொருளாக மாறியுள்ளது. இருவரும், தற்பொழுது தங்களுடைய வீடியோக்களை சமூக வலைதளங்களில், ஷேர் செய்து வருகின்றனர். ஏற்கனவே, பல தமிழ் சினிமா பிரபலங்கள் இதில் இணைந்துள்ள நிலையில், இவர்கள் இருவரும் இணைந்துள்ளதால், விரைவில் மற்றக் கலைஞர்களும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
#TheSwordOfDestiny @anirudhofficial #kaththi pic.twitter.com/g8ASL6qkWr
— vb (@vbzu) March 5, 2020