சிந்துபாத் திரைவிமர்சனம்

27 June 2019 சினிமா
sindhubaadh.jpg

ஒரு மாஸான படத்திற்கு என்னென்ன வேணுமோ, அனைத்துமே இந்தப் படத்தில் உள்ளது எனலாம். தோல் விற்பனையில் ஈடுபடும் கூட்டம் தன்னுடைய மனைவியை கடத்திவிடுகிறது. அவர்களிடம் இருந்து, தன் மனைவியைக் காப்பாற்ற, தாய்லாந்து செல்கிறார் சிறிய அளவில் திருட்டுத் தொழில் செய்யும் விஜய் சேதுபதி. அவருடன் அவருடைய அல்லக்கை. அவர் தன்னுடைய மனைவியை மீட்டாரா, வில்லனை வென்றாரா என்பது தான் கதை.

மலேசியாவில் காண்ட்ராக்ட் தொழிலாளியாக வேலை செய்யும் அஞ்சலி, தன்னுடைய விடுமுறையில் தாயகம் வருகிறார். விஜய் சேதுபதியை காதலிக்கிறார். திரு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி, அஞ்சலியை காதலிக்கிறார். முதலில் விஜய்சேதுபதியை அவமானப்படுத்தும் அஞ்சலி, விஜய் சேதுபதியின் உண்மையான அன்பைப் புரிந்து கொள்கிறார். காதலும் செய்கிறார். இந்நிலையில், சூழ்நிலைக் காரணமாக, அவர் மீண்டும் மலேசியா செல்கிறார்.

அவரை காப்பாற்றுமாறு கதறி அழுகிறார் அஞ்சலி. அவர் தாய்லாந்தில் உள்ள ஒரு கூட்டத்திடம் மாட்டிக் கொள்கிறார். விஜய் சேதுபதியின் நடிப்பு அருமையாக உள்ளது. முதல் பாதியில் மிக ஜாலியாக, காதலனாக வரும் விஜய், மறுபாதியில், அதிரடி காட்சிகளில் மிரட்டுகிறார்.

நேர்த்தியான திரைக்கதையை உருவாக்கி, அதில் நம்மையும் படத்துடன் சேர்த்து ரசிக்க வைக்கிறார் இயக்குநர் அருண் குமார். யுவன் சங்கர் ராஜாவின் இசையில், பாடல்கள் சுமார் ரகம். படத்தின் பிண்ணனி இசை கச்சிதமாக உள்ளது.

பண்ணையாரும் பத்மினியும் படத்திற்குப் பின், இந்தப் படம் சற்று வித்தியாசமானது. இந்த இரண்டையும் இயக்கி தன்னுடைய திறமையை நிரூபித்துள்ளார் இயக்குநர் அருண் குமார். இருப்பினும், வில்லனுக்கு பில்டப் மட்டும் கொடுத்துவிட்டு, விஜயை மாஸாக்குவது தான் சற்று உறுத்தலான விஷயம்.

மற்றபடி சிந்துபாத், நினைப்பதை முடிப்பவன்.

ரேட்டிங்3.2/5

HOT NEWS