நாட்டின் கடைசி மகாராஜா மரணமடைந்தார்! ஊர் மக்கள் கண்ணீர்!

25 May 2020 அரசியல்
singampattiraja.jpg

நாட்டின் கடைசி ராஜாவான, சிங்கம்பட்டி முருகதாஸ் தீர்த்தபதி உடல்நலக்குறைவால் காலமானார்.

இந்தியாவினை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த பொழுது, ஜமீன்கள் ஒழிக்கப்பட்டன. இருப்பினும், சுதந்திர இந்தியாவில் ஒரு சிலர் மட்டுமே கடைசி ஜமீன்களாக இருந்து வந்தனர். அவர்களில் மிகவும் முக்கியமானவராகக் கருதப்பட்டவர் சிங்கம்பட்டியினைச் சேர்ந்த ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி ஆவார்.

இந்தியாவின் கடைசி ஜமீன்தாரான அவர், தன்னிடம் கடவுள் ஒரு முறை வந்து ஒளி வடிவில் பேசியதாகவும், உனக்குப் பணம் வேண்டுமா அல்லது கடைத்தேருகின்றாயா (மோட்சம்) எனக் கேட்டதும், எனக்கு மோட்சம் வேண்டுகின்றேன் என்றுக் கூறினாராம். அப்படிப்பட்ட மனிதருடைய ஆளுமையின் கீழ், சுமார் 80,000 ஏக்கர் நிலமும், ஐந்து கிராமும் பல கோயில்களும் உள்ளன.

89 வயதான இவர், ஆன்மீகத்திலும், தமிழ் மொழியிலும் புலமைப் பெற்றவர். கடந்த சில மாதங்களாகவே வயோதிகத்தின் காரணமாக உடல்நலம் குன்றி இருந்தார். அவருக்கு மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், மே 24ம் தேதி அன்று, அவர் இயற்கை எய்தினார். அவர் மறைவால், அப்பகுதி மக்கள் மிகவும் துயரம் அடைந்துள்ளனர்.

திருநெல்வேலியில் இருந்து மணிமுத்தாறு செல்லும் வழியில் இந்த சிங்கம்பட்டி ஜமீன் அமைந்துள்ளது. 1100ம் ஆண்டில் இந்த ஜமீன் உருவாக்கப்பட்டது. இதில் 31வது அரசனாக முருகதாஸ் தீர்த்தபதி இருந்து வந்தார். தன்னுடைய மூன்றாவது வயதில், அரசனாகப் பதவியேற்றார் முருகதாஸ் தீர்த்தபதி என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS