சீனாவில் மருந்து கண்டுபிடிப்பு! விஞ்ஞானிகள் அறிவிப்பு!

08 May 2020 அரசியல்
covid19medicine.jpg

சீனாவில் இருந்து உலகம் முழுக்கப் பரவி இருக்கின்ற கொரோனா வைரஸிற்கு, தற்பொழுது மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் இருந்து, உலகின் அனைத்து நாடுகளுக்கும் கொரோனா வைரஸானது பரவியது. இதனால், 2,70,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 39 லட்சம் பேர் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து சுமார், 13 லட்சம் பேர் குணமாகி உள்ளனர்.

இது மிக வேகமாகப் பரவி வருவதால், அதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் இறங்கியுள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் தற்பொழுது இந்த வைரஸிற்கான மருந்தினைக் கண்டுபிடித்துள்ளதாகக் கூறுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இதற்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மற்றுமொரு மகிழ்ச்சிகரமான செய்தி வெளியாகி உள்ளது.

சீனாவினைச் சேர்ந்த சினோவாக் பயோடெக் (Sinovac Biotech) என்ற நிறுவனம், புதிதாக பிக்கோவாக் (PiCoVacc) என்ற மருந்தினை உருவாக்கி உள்ளது. இந்த மருந்தினை குரங்குகள் மீது பரிசோதனை செய்துள்ளனர். மூன்று வாரங்களுக்கு முன்பே, குரங்குகளுக்கு இந்த மருந்து கொடுக்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து, குரங்குகள் உடம்பில், கொரோனா வைரஸ் செலுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இந்த வைரஸானது அந்த குரங்களின் உடலில் உள்ளதா என, ஆய்வு செய்யப்பட்டது. அதில் அந்த குரங்குகளின் நுரையீரல் பகுதிகளில், இந்த வைரஸ் காணப்படவில்லை. அதே போல், மற்றொரு கூண்டில் இருந்த குரங்குகளுக்கும் இந்த வைரஸ் கொடுக்கப்பட்டது. ஆனால், அவைகளுக்கு மருந்து கொடுக்கப்படவில்லை. அதனால், அந்த குரங்குகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த மருந்தானது, மிகவும் எளிதாக கொரோனா வைரஸை வென்றுள்ளது என அந்நிறுவனம் கூறியுள்ளது. விரைவில், இது மனிதர்கள் மீது சோதிக்கப்படும் எனவும், அதனைத் தொடர்ந்து, ஆய்வுக்கு உட்படுத்தி, உலகம் முழுக்க வழங்கப்படும் எனக் கூறப்பட்டு உள்ளது. இது தற்பொழுது, உலக நாடுகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

HOT NEWS