கொரோனாவிற்காக இந்தியாவில் தயாராக உள்ள மாத்திரையானது, 68 ரூபாய்க்கு விற்பனைக்கு வரும் என்றுக் கூறப்பட்டு உள்ளது.
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வைரஸிற்கு எதிராகத் தற்பொழுது வரை, 110க்கும் அதிகமான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதனையில் உள்ளன. இந்த சூழ்நிலையில், இன்ப்ளூயன்சா நோய்க்குப் பயன்படுத்தப்படும் பேவிப்பிராவிர் மாத்திரைகளே, கொரோனாவிற்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த மாத்திரைகளை இந்தியாவில் உற்பத்தி செய்ய, அந்த மருந்தினைத் தயாரிக்கும் நிறுவனத்திடம் இந்தியாவின் சிப்லா ஒப்பந்தம் செய்தது. இதற்கு மத்திய அரசும் அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவினைச் சேர்ந்த சிப்லா நிறுவனம், சிப்லென்ஸா என்ற மாத்திரையினைத் தயாரிக்க உள்ளது. இந்த மாத்திரையானது, 68 ரூபாயில் பயனர்களுக்கு கிடைக்கும் விதத்தில் உருவாக்கப்பட உள்ளது.
இந்த மாத்திரைகள் வருகின்ற ஆகஸ்ட் மாதம், இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதலில், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும், பின்னர் மற்றப் பகுதிகளுக்கும் அதிகளவில் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.