தற்பொழுது ஜீவசமாதி கிடையாது! 2045ல் தான் மீண்டும் வாய்ப்பு உள்ளது! சிவகங்கை சாமியர்!

13 September 2019 அரசியல்
jeevasamathi.jpg

நேற்று (12-09-2019) நான் ஜீவசமாதி அடையப் போகிறேன் என, சிவகங்கையைச் சேர்ந்த சாமியார் பரபரப்பை ஏற்படுத்திவிட்டார்.

சிவகங்கையைச் சேர்ந்த, 71 வயதுள்ள இருளப்பசாமி என்பவர், நான் இன்று இரவு ஜீவசமாதி அடைய உள்ளேன் என்று கூறினார். இதனை முன்னிட்டு, அப்பகுதி மக்கள் அவரிடம் ஆசிர்வாதம் வாங்குவதற்கு குவிந்தனர்.

இதன் காரணமாக, அப்பகுதியில், அவருக்காக குழிகள் வெட்டப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன. பக்திப் பாடல்களும் ஒலித்துக் கொண்டு இருந்தன. அதிகளவில் பொது மக்கள் திரண்டதால், காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனை முன்னிட்டு, சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

நிலைமையை உணர்ந்த போலீசார் தொடர்ந்து தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இன்று இரவு என் உயிர் பிரிந்துவிடும் எனவும், அதற்குப் பின், என் உடலை ஜீவ சமாதி செய்யவும் என்றார் சாமியார். இதனால், இரவு முழுக்க விழித்திருந்த அப்பகுதி மக்கள், அவர் ஜீவ சமாதி அடைவதைக் காணக் காத்திருந்தனர்.

ஆனால், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர் ஜீவசமாதி அடையவில்லை. இதனை முன்னிட்டு, அப்பகுதி மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். போலீசாரும் அவர்களை பாதுகாப்புடன் அப்புறப்படுத்தினர். பின்னர், தனியார் செய்தி சேனலுக்குப் பேட்டியளித்த இருள்ளப்ப சாமி, ஜீவசமாதி அடைய வேண்டிய நேரம் தாண்டிவிட்டது எனவும், அடுத்து 2045ல் தான் அந்த நேரம் வரும் எனவும், அதுவரை நான் தவம் மேற்கொள்வேன் எனவும் கூறியுள்ளார்.

HOT NEWS