தாய், மகனை தாண்டிக் குதித்த சிராவயல் காளை! மெய்சிலிர்க்க வைத்த தருணம்!

18 January 2020 அரசியல்
sivagangaijallikattu.jpg

தாய், மகன் உறவிற்கு மிருகங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன, அந்த அளவிற்கு மிக ஆழமானது தான் தாய்-மகன் உறவு.

விஷயத்திற்கு வருவோம். தமிழகம் முழுவதும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டியானது தமிழகத்தின் பலப் பகுதிகளில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது. ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய தினங்களில், மதுரை அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதனிடையே, தமிழகத்தின் வேறுப் பகுதிகளிலும் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை, திருப்புத்தூர் சிராவயல் பகுதியில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. மொத்தம் 500 காளைகள், இதில் அவிழ்த்து விடப்பட்டன.

இதில், குட்டி யானை வாகனத்தில் கட்டப்பட்டிருந்த காளை ஒன்றினை, அழைத்து வந்தவர்கள் அவிழ்த்தனர். அப்பொழுது யாரும் எதிர்பாராத வகையில், அந்த காளை மாடு வெறித்தனமாக ஓடத் துவங்கியது. அப்பொழுது, அதன் வழியில் ஒரு பெண் தன்னுடையக் குழந்தை மற்றும் சிறு பையனுடன் வந்துவிட்டார். அவ்வளவு தான். மாடு முட்டிவிடும் எனப் பலரும் கத்திய நிலையில், அவர்கள் நிலைமையைச் சுதாரித்து, உடனடியாக தரையில் குனிந்து உட்கார்ந்தனர். அவர்கள் அங்கு இருப்பதைப் பார்த்த மாடு, துள்ளிக் குதித்து ஓடியது. இந்த காட்சியானது, தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

HOT NEWS