சிவசேனா-பாஜக தேர்தல் ஒப்பந்தம் கையெழுத்தாவதில் இழுபறி!

30 September 2019 அரசியல்
shivsena.jpg

மஹாராஷ்ட்ராவில் மாநில சட்டப்பேரவைத் தேர்தல், வரும் அக்டோபர் மாதம் 21ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அங்கு கட்சிகளிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றது.

அந்த மாநிலத்தின், பெரிய கட்சியாக கருதப்படும் சிவசேனா கட்சியே, இந்த முறை தேர்தலில் வெல்லும் வாய்ப்புகள் இருப்பதாக, கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, அங்கு பாஜக கட்சியானது, சிவசேனாவுடன் கூட்டணி அமைக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. இருப்பினும், தொகுதிப் பங்கீடு காரணமாக, பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

சிவசேனாவினை பால் தாக்ரே 1966ல் ஆரம்பித்தார். அப்பொழுதில் இருந்து இப்பொழுது வரை, தாக்ரே குடும்பத்தினர் தேர்தலில் போட்டியிட்டதில்லை. தற்பொழுது அக்கட்சியின் தலைவராக இருக்கும் உத்தவ் தாக்ரேவும் போட்டியிடுவதில்லை. இந்நிலையில், உத்தவ் தாக்ரேயின் மகன், ஆதித்யா தாக்ரே போட்டியிடுவார் என்று பலத்த எதிர்ப்பார்ப்பு நிலவி வருகின்றது.

வரும் அக்டோபர் 21ம் தேதி தேர்தலும், 24ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. இன்னும், ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், கூட்டணி குறித்து விரைவில் தகவல்கள் வெளியாகலாம் என தெரிகின்றது.

HOT NEWS