இனி ஆறு நாட்கள் அரசு அலுவலகங்களில் வேலை! தமிழக அரசு அதிரடி!

13 July 2020 அரசியல்
tngovernment.jpg

இனி தமிழக அரசின் அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்காகப் புதிய அறிவிப்பு ஒன்றினை, தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல், ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், பல நிறுவனங்களும், அரசாங்க அமைப்புகளும் மூடப்பட்டு இருந்தன. இந்த சூழலில், கடந்த மே மாதம் முதல், 30 முதல் 50% ஊழியர்கள் அரசு அலுவலகங்களில் பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் வேலைக்கு அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், பேருந்து மற்றும் போக்குவரத்து சிக்கல்கள் காரணமாக, சரியான நேரத்திற்கு அரசு ஊழியர்கள் வேலைக்கு வருவதில்லை என்றப் புகார் எழுந்தது. மேலும், 100க்கும் மேற்பட்ட நாட்கள் ஊரடங்கின் காரணமாக பயனில்லாமல் சென்றுவிட்டது.

இவைகளை எல்லாம் ஈடுகட்டும் பொருட்டு, தற்பொழுது தமிழக முதன்மை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதன்படி, இனி அரசு ஊழியர்கள் காலையில் சரியாக 10.30 மணிக்குள் அலுவலகத்தில் இருக்க வேண்டும். அதே போல், வாரத்தில் ஆறு நாட்களுமே வேலைக்கு செல்ல வேண்டும் என்றுக் கூறியுள்ளார்.

HOT NEWS