ஆறு மாதங்களுக்கு ஊரடங்கு உத்தரவு! இந்தியாவில் சாத்தியமா?

28 March 2020 அரசியல்
london.jpg

உலகம் முழுக்க தற்பொழுது கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், உலக நாடுகள் பலவும் தங்கள் நாட்டின் எல்லைகளை மூடியுள்ளன. பல நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவினை அறிவித்துள்ளன.

இந்நிலையில், இந்த வைரஸால் இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சனும் பாதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு, இந்த வைரஸ் தொற்று இருப்பதை, அவரே உறுதிபடுத்தி உள்ளார். மேலும், இங்கிலாந்தில் அடுத்த ஆறு மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால், அந்நாட்டுப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காகத் தவிர, மற்ற எதற்காகவும் வெளியில் வரக் கூடாது என அரசு வலியுறுத்தி வருகின்றது. ஆனால், பெரும்பாலானவர்கள் அதனைப் பின்பற்ற சிரமப்படுகின்றனர். அரசாங்கம் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ள போதிலும், அவைகளால் பெரிய அளவில் பலன் இல்லை என்றேக் கருதுகின்றனர்.

இதனிடையே, ஆறு மாத காலம் ஊரடங்கு உத்தரவினை, இங்கிலாந்து மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான அனைத்தையும், இங்கிலாந்து அரசாங்கம் தாராளமாக வழங்க முடிவு செய்துள்ளது. அங்குள்ள மக்கள் தொகைக்கு ஏற்றவாறு, அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளது.

தமிழகத்தினை பொறுத்த வரையில், ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகின்றது. இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதால், ஏப்ரல் 14க்குப் பிறகு என்ன நடக்கும் என யாருக்கும் தெரியாது. அத்தியாவசியத் தேவைகளும் கடுமையாக நாளுக்கு நாள் பாதிப்படைந்து வருகின்றன.

HOT NEWS