மாநிலங்களவைக்கு ஆறு பேர் போட்டியின்றி தேர்வு!

18 March 2020 அரசியல்
rajyasabhadmkmp.jpg

மாநிலங்களவைக்குப் போட்டியிட்ட ஆறு பேரும் போட்டியின்றி, தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலமானது, ஏப்ரல் இரண்டாம் தேதியுடன் நிறைவடைகின்றது. இதனையடுத்து, அந்த பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதற்காக திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ் மற்றும் என்.ஆர்.இளங்கோ தங்களுடைய வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

அதிமுக சார்பில், தம்பிதுரை, கேபி முனுசாமி மற்றும் கூட்டணிக் கட்சியான தமாகாவின் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்களைத் தவிர, பிற சுயேட்சை எம்எல்ஏக்களும் தங்களுடைய வேட்புமனுவினை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், இன்று திமுகவின் மூன்று வேட்பாளர்களும், அதிமுக கூட்டணியின் மூன்று வேட்பாளர்களும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக, தேர்தல் நடத்தும் அதிகாரியான சீனிவாசன் அறிவித்துள்ளார். அத்துடன், வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.

HOT NEWS