வியட்நாமில் 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆறு சிவ லிங்கங்கள் கண்டுபிடிப்பு!

28 May 2020 அரசியல்
sivalingamfound.jpg

வியட்நாமில் ஒன்பதாம் நூற்றாண்டினைச் சேர்ந்த, ஆறு சிவ லிங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

உலகின் பலப் பகுதிகளில் இருந்தும், சிவ லிங்கங்கள் கண்டெடுக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், இந்தியாவின் தொல்லியல் அகழ்வாய்வுத் துறையானது, வியட்நாமில் உள்ள மைசன் டெம்பிள் காம்ப்ளக்ஸ் பகுதியில், அகழ்வாய்வில் ஈடுபட்டது. அந்த ஆய்வின் பொழுது, மோனோலித்திக் மணல் கல்லால் உருவாக்கப்பட்ட சிவ லிங்கம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், இந்தப் பகுதியில், இந்திய ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். அப்பொழுது, அந்த இடத்திற்கு அருகிலேயே மேலும் சில சிவ லிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. மொத்தமாக, ஆறு சிவ லிங்கங்களைக் கண்டெடுத்துள்ளனர். இதுவரை, இவ்வளவு லிங்கங்களை, வியட்நாமில் நடத்திய ஆராய்சிகளில் கண்டெடுத்ததில்லை.

இது குறித்துப் பேசியுள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், இது இரு நாட்டு உறவினையும், கலாச்சாரத்தையும் மேலும் ஒன்றிணைக்கும் ஒரு விஷயமாக உள்ளது என மகிழ்ச்சித் தெரிவித்துள்ளார். இவ்வளவு சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சாம் டெம்பிள் காம்பளக்ஸில் அமைந்துள்ள மைசன் காம்ப்ளக்ஸ் பகுதியானது யுனஸ்கோவின் புராதாண இடமாக மாறியுள்ளது.

HOT NEWS