கவுண்டமனியின் ஒரு சில நிமிடக் காமெடியை, ஒரு படமாக எடுத்தால் அது தான் இந்த சிக்சர். படத்தின் நாயகனுக்கு ஆறு மணிக்கு மேல் கண் தெரியாது. அவனுக்கும் ஒரு பெண்ணைப் பார்த்ததும், காதல் வருகின்றது. அவன் காதல் என்ன ஆனது? அவன் காதலியிடம் இந்த விஷயத்தை எப்படி சமாளிக்கின்றான் என்பது தான் படத்தின் கதை.
படத்தின் நாயகன் வைபவே, நன்றாக காமெடி செய்கிறார். பின்னர், எதற்காக காமெடி நடிகர் சதீஷை பயன்படுத்தினார்கள் என்று தெரியவில்லை. உண்மையைக் கூறினால், சதீஷைக் காட்டிலும், வைபவே நன்றாக காமெடி செய்கிறார்.
படத்தில் பெரிய அளவில் லாஜிக் கிடையாது. சுமாரானப் பாடல்களும் கிடையாது. ஆனாலும், படம் நம்மை போரடிக்கவில்லை. படத்தினை இரண்டு மணி நேரம் ஓட்டியாக வேண்டும் என்பதற்காக, ஒரு வில்லன். அந்த வில்லனை ஆறு மணிக்கு எப்படி வைபவ் சமாளிக்கிறார் என்றும், சுவாரஸ்யமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் சாச்சி.
மொத்தத்தில் சிக்சர் படத்திற்கு இரண்டரை ரன்கள் மட்டுமே வழங்கப்படும்.