மாநாடு படத்தில் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக, இயக்குநரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா இணைந்துள்ளார்.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிக்கும் திரைப்படம் மாநாடு. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசையமைக்கின்றார். இந்தப் படத்தில், பிரேம்ஜி, பாரதி ராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டப் பலப் பிரபலங்கள் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தப் படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக எஸ் ஜே சூர்யா இணைந்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தில், அவர் சிம்புவிற்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.