கீழடியில் தற்பொழுது ஆறாவது கட்ட அகழாய்வுப் பணியானது நடைபெற்று வருகின்றது. இந்த இடத்தில், தற்பொழுது ஒரு முழுக் குழந்தையின் உடல் எலும்புக் கூடானது கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
சிந்து சமவெளி நாகரீகத்தினை விட, மிகவும் பழமையான நாகரீகமாக கீழடி நாகரீகம் உள்ளது என, அகழ்வாராய்ச்சி ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். இந்திய அளவில் மாபெரும் திருப்பத்தினை, இந்த ஆய்வு கொண்டு வந்துள்ளது. இந்த இடத்தில், ஆறாவது கட்ட அகழ்வாய்வினை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து, ஆய்வாளர்கள் தினமும் புதிய ஆய்வுகளை செய்து வருகின்றனர்.
இதனிடையே, இங்கு முதுமக்களின் தாழிகள், புதிய விலங்கின் எலும்புக் கூடுகள், தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த சூழ்நிலையில், தற்பொழுது கீழடியில் உள்ள கொந்தகைப் பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாய்வுப் பணியில், ஒரு குழந்தையின் எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்ட உள்ளது.
இந்த எலும்புக் கூடானது, 75 செமீ உயரம் உள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது. மேலும், இந்த எலும்புக் கூட்டின் ஒரு சிலப் பகுதிகள், சிதைந்துள்ள காரணத்தால், இது ஆண் குழந்தையின் எலும்புக் கூடா அல்லது பெண் குழந்தையின் எலும்புக் கூடா என யாருக்கும் தெரியவில்லை. இந்த கொந்தகைப் பகுதியினாது, ஈடுகடாக இருந்திருக்கின்றது என்பதால், அதிகளவில் எலும்புக் கூடுகளும், முதுமக்கள் தாழிகளும் அதிகளவில் கிடைத்துள்ளன.