எஸ்எம்ஸ் மூலம் பணம் எடுக்கும் வசதி! அறிமுகம் செய்த வங்கி!

03 April 2020 அரசியல்
smsfromphone.jpg

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது, அமலில் உள்ளது. வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை, வெளியில் அனாவசியமாக நடமாட தடை விதிக்கப்பட்டு உள்ளன. இதனால், பொதுசேவையானது முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளது.

வங்கிகள் அனைத்தும், பெரும்பாலும் மூடப்பட்டு உள்ளன. ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு தான் அவைகள் திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகின்றது. ஆன்லைன் பேங்கிங், ஏடிஎம் உள்ளிட்டவைகள் மட்டுமே முழுமையான செயல்பாட்டில் உள்ளன. இந்நிலையில், எஸ்எம்எஸ் மூலம் பணம் எடுக்கும் வசதியினை, தமிழ்நாடு கூட்டுறவு வங்கி உருவாக்கி உள்ளது.

வங்கி சேவை உங்கள் வீட்டு வாசலில், என்ற பெயரில் இந்த சேவையானது ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், 2,000 முதல் 10,000 வரை நீங்கள் வீட்டில் இருந்தபடியே, எஸ்எம்எஸ் மூலம் பணம் எடுக்கலாம். முதல் முறையாக எடுத்தால் எவ்விதக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. அடுத்த ஒவ்வொரு பயன்பாட்டிற்கும், 100 ரூபாய் கட்டணமும், ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

HOT NEWS