நடிகர் தீப்பெட்டி கணேசனுக்கு, மக்கள் நீதி மய்யத்தின் சினேகன், தன்னுடைய உதவியினை செய்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், நடிகர் தீப்பெட்டி கணேசன் வீடியோ ஒன்றினை வெளியிட்டார். அதில், தான் தற்பொழுது மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும், அஜித் சாருக்குத் தெரிந்தால் தன்னால் இயன்ற உதவியினைச் செய்வார் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த வீடியோவானது வைரலானது. ரேணிகுண்டா உள்ளிட்டப் பலப் படங்களில் நடித்தவர் கணேசன். அவருக்கு இரண்டு குழந்தைகளும், மனைவியும் உள்ளனர். அவருடைய வேண்டுகோளினை, அஜித்திடம் கொண்டு சேர்ப்பதாக, நடிகர் ராகவா லாரன்ஸ் கூறினார். மேலும், தன்னால் இயன்ற உதவியினையும் செய்வதாகக் கூறினார். இந்நிலையில், அவருடைய நிலையைக் கண்டப் பலரும் உதவ முன்வந்துள்ளனர்.
பாடலாசிரியர், நடிகர் எனப் பன்முகத் திறமைக் கொண்ட சினேகன், தன்னுடைய சினேகம் அறக்கட்டளை சார்பாக, தீப்பெட்டி கணேசனுக்கு பொருளுதவி செய்துள்ளார். மேலும், கணேசனின் குழந்தைகளுக்கான இந்த ஆண்டு படிப்பு செலவினையும், தாம் ஏற்பதாக அறிவித்துள்ளார்.