ஹைதராபாத்தில் கொடூரம்! மனைவி, குழந்தையைக் கொன்று சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை!

03 March 2020 அரசியல்
suicide.jpg

ஹைதராபாத்தில் நகரில், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை விஷம் வைத்து கொண்ட, சாப்ட்வேர் இன்ஜினியர் அவர்கள் இறந்த பின், தானும் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம், அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

40 வயதுடைய பிரதீப் என்ற நபர், தன் 35 வயதுடைய மனைவி சுவாதி மற்றும் ஆறு மற்றும் இரண்டு வயது குழந்தைகளுடன் ஹைதராபாத் நகரில் வசித்து வந்தார். அவருக்கு ஏற்பட்ட பண நெருக்கடி மற்றும் கடன் பிரச்சனைக் காரணமாக, வீட்டில் சமைத்த உணவில் விஷத்தினைக் கலந்துள்ளார்.

அதனை அறியாத மனைவியும், குழந்தைகளும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டுள்ளனர். அவர்கள் இறப்பதை பார்த்துவிட்டு, அழுதுள்ள பிரதீப் பின்னர், தானும் அந்த விஷம் கலந்த உணவினை உண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று, இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது.

சனிக்கிழமை முதல், அவர்கள் யாரும் தங்களுடைய வீட்டில் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்த வந்த போலீசார், வீட்டினை உடைத்து உள்ளேப் புகுந்துள்ளனர். அங்கு இறந்த கிடந்த உடல்களை மீட்டு, அரசு உதவி பெறும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, உடற்கூறு நடைபெற்றுள்ளது.

முன்னதாக, பிரதீப் தன்னுடைய தந்தைக்கு எழுதிய கடிதத்தில், என்னை மன்னியுங்கள் அப்பா, உங்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை என எழுதியிருக்கின்றார். போலீசார் விசாரணையின் பொழுது, அவர் பணப் பிரச்சனையின் காரணமாக, இந்த முடிவு எடுத்ததாக கூறப்படுகின்றது. பணப் பிரச்சனையால், ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம், அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

HOT NEWS