சோனியா காந்தி பற்றிய ஒரு சில உண்மைகளும், வதந்திகளும்!

02 May 2020 அரசியல்
rahulsonia.jpg

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியினைப் பற்றி, பல வதந்திகளும் உண்மைகளும் இணையத்தில் வலம் வந்து கொண்டே இருக்கின்றன. அந்த அளவிற்கு, அவர் அதிகளவில் பேசப்படும் நபரும் கூட. அவரைப் பற்றிய ஒரு சில உண்மைகளைப் பற்றி பார்ப்போம்.

உண்மை பெயர்

சோனியா காந்தியின் பெயர் எட்விக் ஆண்ட்டோனியோ மைனோ. இவர் 1946ம் ஆண்டு பிறந்தார் என, இங்கிலாந்து என்சைக்லோபீடியா தெரிவிக்கின்றது. ஆனால், அவர் சோனியா மைனோ என்றே அழைக்கப்பட்டு வந்தார்.

பாசிச தந்தை

இவருடைய தந்தை, இத்தாலியின் கொடுங்கோல் சர்வாதிகாரியான பெனிட்டோ முசோலினியின் தீவிர ஆதரவாளர் ஆவார். ஹிட்லரின் படைக்காக, ரஷ்ய படையுடன் சணையிட்டவர். முசோலினி இறந்த காலக் கட்டத்தில் தான், சோனியா காந்தி பிறந்துள்ளார்.

பார் டான்சர்

சோனியா காந்தி, ஒரு பாரில் நடனமாடியவர் என்ற ஒரு செய்தியும் பொதுமக்கள் மத்தியில் வெகுவாகப் பரவி உள்ளது. உண்மையில், அவர் ஒரு பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது, செலவுகளுக்காக பாரில், ஆர்டர் எடுக்கும் பணியினைச் செய்திருக்கின்றார். அப்பொழுது தான், ராஜீவ் காந்தியினைச் சந்தித்துள்ளார். ஆனால், பலரும் அவரை பார் டான்சர் என்றேப் பேசுகின்றனர்.

HOT NEWS