நடிகை சோனியா அகர்வாலுக்கு 2வது திருமணம் நடக்க இருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகைகளுள் ஒருவராக சோனியா அகர்வால் இருக்கின்றார். இவர், இயக்குநர் செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் படத்தில் அறிமுகமானார். பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். இவருக்கென, தனி ரசிகர் படையே உண்டு.
இவர் கடந்த 2007ம் ஆண்டு, இயக்குநர் செல்வராகவனை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். பின்னர், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக 2010ம் ஆண்டில் விவாகரத்துப் பெற்றார். இதனைத் தொடர்ந்து, தற்பொழுது மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கி உள்ளார். அயோக்கியா, தடம் உள்ளிட்டப் படங்களில் அவர் நடித்துள்ளார்.
அவர் தற்பொழுது தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில், புகைப்படம் ஒன்றினை பதிவிட்டு உள்ளார். அதில், இன்னும் மூன்று நாட்களில் என்றுக் குறிப்பிட்டு உள்ளார். அதற்கு ரசிகர்கள் இவர் திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்றுக் கூறி வருகின்றனர். அந்தப் புகைப்படம், தற்பொழுது வைரலாகி வருகின்றது.