மீண்டும் தலைவராக சோனியாகாந்தி! எழுமா? வீழுமா!

17 August 2019 அரசியல்
soniagandhi.jpg

காங்கிரஸ் கட்சி, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், படுதோல்வியை சந்தித்தது. இதுவரை நடந்தத் தேர்தல்களில், இந்த மாதிரியானத் தோல்வியை அந்தக் கட்சிப் பெற்றதில்லை.

இதனால், கடும் அதிருப்தியில் இருந்து வந்த அந்தக் கட்சியின் தலைவர் திரு. ராகுல் காந்தி, தன்னுடையப் பதவியை ராஜினாமா செய்தார். இதனால், புதியத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டனர். அதே சமயம், ராகுல் காந்தியை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் ஈடுபட்டனர். இருப்பினும் ராகுல் காந்தி, எதற்கும் சம்மதிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியில் நடைபெற்ற காரியக் கமிட்டிக் கூட்டத்தில் இருந்து, ராகுல் காந்தி வெளியேறினார். இதனால், மீண்டும் சோனியா காந்தியையேத் தலைவராக காங்கிரஸ் கட்சியினர் தேர்வு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மீண்டும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வத் தலைவராக சோனியா காந்தி பதவியேற்றுள்ளார். எனினும் இது, தற்காலிகமானது என ஒரு சிலர் கருதுகின்றனர்.

2018ம் ஆண்டு, ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பதவியேற்றார். அதற்கு முன், 1998ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை, காங்கிரஸ் கட்சியின் தலைவராக, திருமதி. சோனியா காந்தியே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS