பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டியை கூண்டோடு கலைத்த சோனியா காந்தி!

23 January 2020 அரசியல்
soniagandhi.jpg

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கமிட்டியை, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மொத்தமாக கலைத்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில், தற்பொழுது காங்கிரஸின் ஆட்சியே நடைபெற்று வருகின்றது. அங்கு, கேப்டன் அம்ரீந்தர் சிங் முதலமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகின்றார். அவருக்கும், எம்பி பிரதாப் பஜ்வாக்கும் இடையில் மோதல் இருந்து வந்தது. இதனிடையே, இது நாளுக்கு நாள் பெரிதாகி வந்தது.

காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் முதல், கட்சியின் உயர்மட்ட அதிகாரிகள் வரை பலரும், மாநிலத் தலைமைக்குக் கட்டுப்படாமல் இருந்து வந்தனர். இதனிடையே பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியினை சந்தித்து முறையிட்டார். இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டியினை கூண்டோடு கலைத்து, அதிரடி உத்தரவினை வெளியிட்டார் திருமதி சோனியா காந்தி.

மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் சுனில் ஜாகர் மட்டுமே, தற்பொழுது பதவியில் உள்ளார். இது குறித்து, செய்தியாளர்களுக்கு அறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளரான கே.சி.வேணுகோபால்.

தற்பொழுது, கட்சிக்கும் மக்களுக்கும் இடையில் சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்காக 11 பேர் கொண்ட குழுவினை சோனியா நியமித்துள்ளார். இந்த குழுவில் அம்ரீந்தர் சிங்கும், சுனில் ஜாகரும் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவிற்கு, ஆஷா குமாரி தலைமை ஏற்பார் என்றும் அந்த அறிக்கையில் காங்கிரஸ் கட்சித் தெரிவித்துள்ளது.

HOT NEWS