ஏழைகளின் குரல் பாஜகவின் காதுகளுக்கு கேட்கவில்லையா? 7,500 ரூபாய் கொடுங்கள்!

29 May 2020 அரசியல்
soniagandhicovid.jpg

ஏழைகளின் அழுகுரல் பாஜகவின் காதுகளுக்கு கேட்கவில்லையா என, காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

தற்பொழுது இந்தியா முழுவதும் ஊரடங்கானது அமலில் உள்ளது. வருகின்ற மே-31ம் தேதியுடன் இந்த ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மேலும் இது நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகின்றது. இந்த ஊரடங்கின் காரணமாக, ஏழை எளிய மக்களும், நடுத்தர மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். பல லட்சம் புலம் பெயரும் பொதுமக்கள், கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஊரடங்கின் காரணமாக, தொழில்நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன.

இதனால், தங்களுடைய சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப அவர்கள் முடிவு செய்துள்ளனர். இருப்பினும், பொதுப் போக்குவரத்து இல்லாதக் காரணத்தினால் பல நூறு கிலோமீட்டர்கள் நடந்தே சென்று, தங்களுடைய சொந்த ஊரினை அடைந்து வருகின்றனர். இப்படிப்பட்ட பிரச்சனைகளால், அரசின் மீது பலரும் தங்கள் அதிருப்தியினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், தினமும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் தொடர்ந்து வீடியோக்கள் மூலம், தங்களுடையக் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அப்படிப்பட்ட செயலில், தற்பொழுது காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஒரு வீடியோ பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், ஏழை எளிய மக்களின் அழுகுரல் உங்கள் பாஜக அரசின் காதுகளுக்கு விழவில்லையா, கேட்கவில்லையா எனக் கேட்டுள்ளார்.

பசி, பட்டினி இவைகளுடன் போராடும் புலம் பெயரும் தொழிலாளர்களின் நிலை உங்கள் காதில் விழவில்லையா? இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு தலா 7,500 ரூபாயினை வழங்க வேண்டும் எனவும், முதற்கட்டமாக 10,000 ரூபாயினை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

HOT NEWS