பிரதமருக்கு கடிதம் எழுதிய சோனியா! ஈஎம்ஐ வசூலினை ஒத்திவைக்க வேண்டுகோள்!

27 March 2020 அரசியல்
soniagandhi.jpg

இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால், யாரும் வேலைக்குச் செல்ல இயலாத சூழ்நிலை நிலவி வருகின்றது. இந்நிலையில், பொதுமக்கள் பயன்தரும் அறிவிப்பினை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், மத்திய அரசின் செயல்களுக்கு காங்கிரஸ் கட்சியானது தங்களுடைய வரவேற்பினை தெரிவித்துள்ளது. இது குறித்து, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ள சோனியா காந்தி, அந்தக் கடிதத்தில் பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வங்கிக் கணக்குளில் 7500 ரூபாய் நிதி, விலைய்யில்லாத 10 கிலோ அளவிற்கு அரிசி அல்லது கோதுமை உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், அடுத்த ஆறு மாதத்திற்கு வங்கிகள், நிதிநிறுவனங்கள் உள்ளிட்டவைகள், பொதுமக்களிடம் இருந்து வட்டி மற்றும் ஈஎம்ஐ உள்ளிட்டவைகளை வசூலிக்கவும் தடை விதிக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், இந்தக் காலக் கட்டத்தில் வட்டி வசூலிக்கக் கூடாது எனவும் கூறியுள்ளார்.

நாடு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் பொழுது, நாம் அனைவரும் எவ்வித பாரபட்சமுமின்றி ஒன்றாக செயல்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

HOT NEWS