தமிழகத்தில் இணையக் குற்றங்களைத் தடுக்க கூடுதல் காவல் நிலையங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள்!

23 October 2019 தொழில்நுட்பம்
cybersecurity1.jpg

இந்தியாவில், பணப் பரிமாற்றம் முதல் அனைத்தையுமே டிஜிட்டலாக்கி வருகின்றது. இந்நிலையில், இந்த தொழில்நுட்ப வளர்ச்சியினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்கின்றார்களோ இல்லையோ, குற்றவாளிகள் தெளிவாகவும், மிக நூதனமாகவும் பயன்படுத்திக் கொண்டு பல பேரை ஏமாற்றிப் பணம் பார்த்துவிடுகின்றனர்.

மேலும், தமிழகத்தில் படித்தவர்கள் அதிகம் என்பதால், இது போன்ற குற்றங்கள் அதிகம் நடைபெறுகின்றன. இந்தப் பிரச்சனைகளால், காவல்நிலையங்களில் புகார்களும் அதிகமாக குவிந்து வருகின்றன. இந்தப் புகார்களின் மீது, போதுமான நடவடிக்கை எடுக்கவும், அதற்கான வசதியும் குறைவாகவே உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, சுமார் 28.97 கோடி ரூபாயை தமிழக காவல்துறை ஒதுக்கி உள்ளதாக, தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், தமிழகத்தின் 40 இடங்களில், இதற்கான காவல் நிலையங்களும், அதே போல் இந்தக் குற்றங்களை ஆய்வு செய்வதற்கு, ஆறு இடங்களில் ஆராய்ச்சி மையங்களும் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

HOT NEWS