பிட்காயின் பயன்பாட்டிற்குத் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு ஏற்கனவே எதிர்ப்பினையும், அதிருப்தியையும் மத்திய அரசு வெளிப்படுத்தியிருந்தது. மேலும், இதனைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு, அவரவரேப் பொறுப்பேற்க வேண்டிய சூழல் நிலவியது.
இந்நிலையில், இந்த பிட்காயின் எனப்படும் கிரிப்டோ கரண்ஸியை தடை செய்ய, அமைச்சரைவைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். மேலும், இதனைப் பயன்படுத்துபவர்களுக்கும் அபராதம் விதிக்கவும், முடிவு செய்துள்ளது.
இதன் காரணமாக, இந்தியாவில் பிட்காயினை பயன்படுத்துபவர்கள் தற்பொழுதுக் கலக்கத்தில் உள்ளனர். பிட்காயின் பயன்பாட்டை இணையதளத்தில் கண்டுபிடிக்க முடியாது. இதன் காரணமாக, சட்டவிரோதமான செயல்களுக்குப் பணமானது பரிமாற்றம் செய்யப்படுகிறது என்றப் புகாரானது உலகம் முழுக்க நிலவி வருகிறது.