ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் சிக்கித் தவித்த 90க்கும் அதிகமான தமிழகர்கள், நடிகர் சோனு சூட் உதவியால் சென்னை வந்தடைந்தனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக, பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், புலம் பெயரும் தொழிலாளர்களுக்காக, நடிகர் சோனு சூட் பெரிய அளவில் உதவிகளைச் செய்து கொண்டு இருக்கின்றார். வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்காகப் பல உதவிகளை அவர் செய்து வருகின்றார்.
இந்த சூழ்நிலையில், தற்பொழுது தமிழகத்தினைச் சேர்ந்த மாணவர்கள் பலர், ரஷ்யாவில் உள்ள மாஸ்கோவில் மருத்துவம் பயின்று வந்தனர். கொரோனா காரணமாக, அவர்களை அழைத்து வர சிறப்பு விமானம் ஒன்றினை சோனு சூட் ஏற்பாடு செய்தார். அந்த விமானம், நேற்று அவர்களை ரஷ்யாவில் இருந்து ஏற்றிக் கொண்டு, இரவே சென்னை வந்தடைந்தது. தமிழகத்திற்கு வந்து இறங்கிய 90க்கும் அதிகமான மாணவர்கள், நடிகர் சோனு சூட்டிற்க்கு நன்றித் தெரிவித்து உள்ளனர்.