ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 3லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பினை வழங்க முடிவு செய்திருப்பதாக, நடிகர் சோனு சூட் முடிவு செய்துள்ளார்.
கொரோனாவின் காரணமாக ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து தன்னுடைய சொந்த ஊர்களுக்குச் செல்ல இயலாமல் இருந்து வந்த புலம் பெயரும் தொழிலாளர்களுக்காக விமானங்கள், பேருந்துகள் உள்ளிட்ட வசதிகளைச் செய்து கொடுத்து வருகின்றார் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்.
அவருக்கு இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றில் இருந்தும், ஆதரவும் பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், கொரோனா மற்றும் ஊரடங்கின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு, புதிய உதவியினை வழங்க திட்டமிட்டு உள்ளார். அதன்படி, தற்பொழுது தன்னுடைய உதவியாளர்களை இதற்காக நியமித்து உள்ளார்.
அவர்கள் மூன்று லட்சம் பேருக்கான வேலைகளை வழங்க உள்ளதாகவும், அதன் மூலம் கொரோனா மற்றும் ஊரடங்கால் பாதிக்க்கப்பட்டவர்கள் பயன்பெறுவர் எனவும் அவர் கூறியுள்ளார்.