சர்வதேச கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் பட்டியலில், தமிழின் சூரரைப்போற்று மற்றும் அசுரன் திரைப்படங்கள் நுழைந்துள்ளன.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் அசுரன். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படமானது, பட்டித் தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இந்தப் படத்திற்காக, சிறப்பாக நடித்திருந்த தனுஷிற்கு தேசிய விருது கிடைக்கும் என, பலரும் கூறி வருகின்றனர்.
இந்த சூழலில், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, திரையறங்கிற்கு வராமல் அமேசான் ப்ரைம் மூலம், வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. இந்தப் படத்தில் சூர்யா கதாநாயகனாகவும், ஊர்வசி, அபர்னா, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். இந்தப் படமானது, பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் வெளியானாலும், இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படமாக உருவெடுத்துள்ளது. படத்தினை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். இந்தப் படத்திற்கும் ஜிவி பிரகாஷ் குமார் தான் இசையமைத்துள்ளார்.
இந்த இரண்டு படங்களும் தற்பொழுது கோல்டன் குளோப் விழாவில், திரையிடப்பட உள்ளன. இதற்கு தமிழ் திரைப்படப் பிரபலங்களும், ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.