காப்பான் படத்தின் வெற்றியினைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா நடித்து வரும் படத்தின் பெயர் சூரரைப் போற்று. இந்தப் படத்தின் சூட்டிங் தற்பொழுது விறுவிறுப்பாக, சென்று கொண்டு இருக்கின்றது. இதில் சூர்யா நடித்து வருகின்றார்.
இப்படத்தில், மாரா என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் சூர்யா நடிக்கின்றார். இப்படத்திற்கு ஜிவி பிராகஷ் இசையமைக்கின்றார். நிகித் பாம்பி இயக்குகின்றார். முற்றிலும், வித்தியாசமான கதைக்களத்தினை மையமாகக் கொண்டு, சூரரைப்போற்று திரைப்படம் உருவாகி வருகின்றது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. வெளியாகி ஒரு நாள் ஆன நிலையில், இந்த பர்ஸ்ட் லுக், டிவிட்டரில் ஒரு மில்லியன் இம்ப்ரஸன்களைப் பெற்று அசத்தியுள்ளது. இதனை, 10 லட்சம் டிவிட்டர் பயனர்கள் பார்த்துள்ளனர். இது மற்ற சூர்யாவின் படங்களைக் காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை சூர்யாவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.