விரைவில் சூதுகவ்வும்-2! அறிவிப்பு வெளியானது!

19 April 2020 அரசியல்
soothukavvum.jpg

காசு, பணம், துட்டு, மணி, மணி என்றப் பாடல் கடந்த காலங்களில் மிகவும் பிரபலமானதாக இருந்தது. அந்தப் பாடல் மட்டுமல்ல, அந்தப் படமும் வைரல் ஹிட் எனலாம். பெரிய நடிகர்கள் இல்லாமல், பெரிய பட்ஜெட் இல்லாமல், பெரிய விளம்பரம் இல்லாமல் வெளியான படம் சூது கவ்வும்.

இந்தப் படம், பட்டித்தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. அனைவரும் வளரும் நடிகர்கள் என்பதால், எவ்வித ரசிகர்கள் படையும் இல்லாமல் வெளியான திரைப்படம். படத்தில் வரும் எதார்த்தமான கதாபாத்திரங்கள், கணக்கச்சிதமான காமெடிகள், எதிர்பாராத திருப்பங்கள் என, இப்படம் மாபெரும் வரவேற்பினைப் பெற்றது. அன்று முதல் தற்பொழுது வரை, அந்தப் படத்தின் நாயகன் விஜய் சேதுபதிக்கென தனி ரசிகர்கள் படையே உருவாக ஆரம்பித்து விட்டனர்.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்பொழுது உருவாகும் என, அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. ஆம், சூதுகவ்வும்-2 படத்தின் கதை தயாராக இருப்பதாக, அப்படத்தின் முதல் பாகத்தினைத் தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

மேலும், தெகிடி இரண்டாம் பாகம் மற்றும் மாயவன் இரண்டாம் பாகத்தின் கதைகள் தயார் எனவும், விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால், விஜய் சேதுபதியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

HOT NEWS