நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கங்குலி, தற்பொழுது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.
கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு, திடீரென்று ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக, மருத்துவமனையில் அவசர அவசரமாக அனுமதிக்கப்பட்டார் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி. இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, அவரைத் தொடர்பு கொண்டு பலரும் நலம் விசாரித்தனர்.
அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில், இன்று அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும், மருத்துவமனை நிர்வாகத்திற்கும், நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி எனத் தெரிவித்து உள்ளார்.