கடந்த ஜூன் 23ம் தேதி அன்று, தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. அதில் விஷால் அணியினர் ஒரு பக்கமும், நடிகர் பாக்கியராஜ் தலைமையில் மற்றொரு அணியினரும் போட்டியிட்டனர்.
பதவிக் காலம் முடிந்து ஆறு மாதத்திற்கு பிறகு, நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதனையடுத்து, அரசின் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டது. மேலும், தேர்தல் நடத்த உத்தரவிட்ட நீதிமன்றம், வாக்கு எண்ணிகையினைத் தடை செய்தது.
இந்த வழக்கின் விசாரணையானது, பல கட்டங்களாக நடைபெற்று இப்பொழுது இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ளது. இந்த வழக்கினை தீர்ப்பினை வழங்கிய நீதிமன்றம், இந்த தேர்தல் செல்லாது எனவும், மறு தேர்தலை நடத்தவும் உத்தரவிட்டது. அதுவரை, அரசு நியமித்த சிறப்பு அதிகாரி நடிகர் சங்கத்தினை சிறப்பு மேற்பார்வை செய்வார் எனக் கூறப்பட்டுள்ளது.