தென்மேற்குப் பருவ மழை தொடங்கியது! குளிர்ந்து போன கேரளம்!

02 June 2020 அரசியல்
rainmonsoon.jpg

தற்பொழுது கேரள மாநிலத்தில், தென்மேற்குப் பருவ மழைத் தொடங்கி உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தென் மேற்குப் பருவ மழைப் பொழிய ஆரம்பிக்கும். இந்த மழையானது, பெருமளவிலான தண்ணீரினை நமக்கு ஆண்டு தோறும் வழங்கி வருகின்றது. அதே போல, தற்பொழுது கேரள மாநிலத்தில் இந்த மலையானது தொடங்கி உள்ளது.

இந்த மழையின் மூலம், தென் இந்தியா முழுவதும் பயன்பெறுகின்றது. தற்பொழுது பெய்யும் மழையானது, கேரளா மாநிலத்தில் தொடங்கி, கர்நாடகம், கோவா, மஹாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மழைத் தர உள்ளது. இதனால், பொதுமக்கள் தற்பொழுது நிம்மதி அடைந்துள்ளனர். கேரளாவின் ஒன்பது மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது.

அக்னி நட்சத்திரம் முடிவடந்ததை அடுத்து, தற்பொழுது மழை பெய்ய ஆரம்பித்து உள்ளதால், தென் இந்திய மக்கள் தற்பொழுது மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கேரளாவில், விட்டு விட்டு மழை பெய்து வருகின்றது. இதனால், அம்மாநிலத்தில் மீண்டும் குளிர்ச்சி ஏற்படத் தொடங்கி உள்ளது.

HOT NEWS