அதிநவீன இந்திய ஏவுகணை சவ்ரியா சோதனையில் வெற்றி! அதிகரிக்கும் இந்திய பலம்!

05 October 2020 அரசியல்
shauryamissile.jpg

செயற்கைக்கோள்களில் சிக்காத சவ்ரியா ஏவுகணையினை, இந்தியா தற்பொழுது வெற்றிகரமாக செய்துள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், தற்பொழுது லடாக் மற்றும் லே பகுதிகளில் மோதல் ஏற்பட்டு உள்ளது. எப்பொழுது வேண்டுமானாலும், போர் மூளும் அபாயம் நீடித்து வருகின்றது. இந்த சூழ்நிலையில், இந்திய அரசு இந்திய இராணுவத்திற்காக பல நட்பு நாடுகளிடம் இருந்து ஆயுதங்களை வாங்கிக் குவித்து வருகின்றது. அதே போல், இந்தியாவின் டிஆர்டிஓ அமைப்பானது, பல ஏவுகணைகளைச் சோதனை செய்தும் வருகின்றது.

அந்த வரிசையில், ஒரிசா மாநிலத்தில் உள்ள அப்துல்கலாம் தீவில் இருந்து, சவ்ரியா ஏவுகணையானது சோதிக்கப்பட்டது. அந்த சோதனையில், வங்காள விரிகுடாவில் வைக்கப்பட்ட இலக்கினை, சவ்ரியா ஏவுகணைத் துல்லியமாகத் தாக்கி அளித்துள்ளது. இதனை டிஆர்டிஓ அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணையானது, 1000 கிலோமீட்டர் பயணம் செய்து எதிரிகளின் இலக்கினைத் தாக்கி அளிக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த ஏவுகணையால் 200 முதல் 1000 கிலோ எடையுள்ள ஆயுதத்தினை சுமந்து பயணிக்க இயலும். உலகின் முதல் 10 சக்தி வாய்ந்த ஏவுகணைகளில் இடம்பெற்று உள்ளது. இது, அவ்வளவு எளிதாக செயற்கைக்கோளில் சிக்காது. ஒலியினை விட பல மடங்கு வேகத்தில் பயணிக்கக் கூடியது என்றப் பெருமையினை இந்த ஏவுகணைப் பெற்றுள்ளது.

HOT NEWS