ஸ்பெயின் நாட்டில் உள்ள 25 லட்சம் பேருக்கு 39,000 ரூபாய் நிவாரணம்!

30 May 2020 அரசியல்
spaingate.jpg

உலகம் முழுவதும் பரவி வருகின்ற கொரோனா வைரஸிற்கு தற்பொழுது வரை, மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 60 லட்சம் பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த வைரஸால் ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் தான், கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த சூழ்நிலையில், அந்த நாடுகள் தற்பொழுது இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளன. இருப்பினும், பொதுமக்களின் சகஜமான வாழ்க்கையானது கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. அவர்களின் பொருளாதாரமும் மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனால், ஸ்பெயின் நாட்டில் உள்ள ஏழைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால், ஒவ்வொரு ஏழைக்கும் மாதம் 39,000 ரூபாயினை வழங்க முடிவு செய்துள்ளது ஸ்பெயின் அரசு. அதாவது மாதமாதம் ஒரு நபருக்கு 462 யூரோ வழங்கத் திட்டமிட்டுள்ளது. அதே போல் மொத்தமாக ஒரு குடும்பத்தினருக்கு 1015 யூரோக்களை வழங்க முடிவு செய்துள்ளது.

அதாவது இந்திய மதிப்பின்படி, சுமார் 85,000 ரூபாய் ஆகும். இந்தத் திட்டத்தால், ஸ்பெயின் நாட்டில் உள்ள 8 லட்சத்து 50 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெற உள்ளனர். நம் நாட்டில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 7,500 ரூபாய் வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியானது, தொடர்ந்து மத்திய அரசினை அறிவுறுத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS